அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

07 September, 2011

மீண்டும் கருவறை சுகம் தேடி



சுகவாசியாய் ஒன்பதரை மாதங்கள்
சகாக்கள் சத்தமில்லமல்
யுத்தமில்லாமல்

விழித்ததும் வழித்ததா
மருத்தவசிசி !
சுகப்பிரசவம் ஆனதாலோ
சுகம் தேடி தினம்!

சிர்க்கப் பழகி தந்தவர்கள்
சித்திரவாதை செய்ய தொடங்கிவிட்டனர்

மணமில்லா பணம்
மகாத்மாவையும் மாற்றும்
பாடுபாக்க என்னோடு
நாடு கடத்தியிருந்தால்
அமீரகம் நோக்கி..!

கனவுகள் கந்து ரொட்டிகள்
காணும் போது
கண்ணீர் துளிகளாய்
இதயத்திலும்..!

நான் வென்றவைகள்
கரையான் புற்றிலும், கரும்பு சக்கையிலும்
ஏமாப்புடன் இருப்பிடமானது

கானல் நீரும் வற்றியே போனது
கடைசிவரை தாகத்தோடு
பயணம் பாலைவனத்தில்
சோலை தேடி
தற்போது வேலை தேடி !

தாயே...
என் சுவாசம்
யாருக்கும் ஆசுவாசமாக இல்லை
உன் சுவாசத்தில் ஒரு பாதியில் மீதி போதும்
நான்
மீண்டும் உன் கருவறை சேர்கிறேன்
வேண்டாம் என்று விடாதே
நீயும்....?

15 July, 2011

கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர்க்கு ஒரு கவி மின்னஞ்சல்

மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கு,

இமயம் தொட முயற்சிக்கும் ஒரு தமிழ் இளைஞனின் மின்னஞ்சல் கவி அமீரகத்திலிருந்து..!




கனவு தொலைத்து
கடல் தாண்டி
ஈச்ச மரத்து
ஈ-க்களுக்கு மத்தியில் நானும் ஒருவன் !

இடம் பெறவில்லை
வாக்காளர் பட்டியலில்
இடம் பெற்றிருக்கிறேன்
அந்நிய தேச வருமானத்தின்
சேமிப்பின் ஓரத்தில்

நொடிகளில் முற்றுப்புள்ளி
இட்டுவிடுவேன்
காலத்தை
விரையம் செய்யாமல்
மின்னஞ்சலிற்க்கு !

கலாமின் கனவுலகில்
கனவு தேசமொன்றை
நினைவாக்க துடிக்கும்
இளைஞர்களின் எழுச்சிக்குரலில்
இதுவும் !
வேண்டுகிறேன் நானும் !

கல்லூரிச்சாலையில்
கள்ளுக்கடைகள்
களையப்பட வேண்டும் !

கள்ளுக்கடைகளை விட்டு
கல்லூரிகளை அரசு
சுமைதாங்க வேண்டுகிறேன் !

மலர்ந்து மறைந்து போன
மழை நீர் சேகரிப்பு
மீண்டும் இம்மண்ணில்
வேண்டுகிறேன் !

கார் கம்பெனிகள்
கடையநல்லூரிலும் கட்டப்பட
வேண்டுகிறேன் !

விளை நிலங்கள்
வீடாகாமல் தடுக்க
வேண்டுகிறேன் !

பசுமை தொகுதியென்று
பாராளுமன்றமும் பேச
வேண்டுகிறேன் !



உலக கோப்பையில்
தமிழன் ஒருவனாவது...?
நிலைமாற வேண்டுகிறேன் !
கடையநல்லூரிலும் ஒருவன்
கால் பதித்திருக்கிறான் என்று !

மகளிர்கென அரசுக்கல்லூரி
கவலை கொண்ட பெற்றோர்களுக்காக
வேண்டுகிறேன் !

மதங்கள் கடந்து
மாற்று திறனாளிக்கும்
மறுவாழ்வளிக்கும்
”அமர் சேவா சங்கம்”
மேலும் வளம் பெற
வேண்டுகிறேன் !

ஐந்தாண்டுகளில்
அமைச்சரவையே
நலம் பெற செய்த
சட்டமன்ற உறுப்பினர்
என்ற செய்தி வேண்டுகிறேன் !

வேண்டுகிறேன்..!
இன்னும் நலன்கள் பல!



தங்கள் நலம்
எங்கள் நலத்தால்
வளம் பெற
வேண்டுகிறேன் !

அடுத்த தேர்தலிலாவது
நானும் வாக்களிக்க
வேண்டுகிறேன் !

எனது மின்னஞ்சலிற்க்கு
எழுந்து நின்று நிமிடம்
இரண்டு அஞ்சலி செலுத்தாமல்
செயல்படுத்துவீர்கள்
என்றதோர் நம்பிக்கையில்
துடித்துக் கொண்டிருக்கும்
இளைஞர்களில்
நானும் ஒருவன்
தமிழன் !

எனது மின்னஞ்சலிலோ, அதை வெளிப்படுத்தியதிலோ ஏதேனும் தவறு இருப்பதாகின், மன்னிக்க வேண்டுகிறேன்.
தங்களின் பொன்னான நேரம் செலவழித்ததற்கு நன்றி சட்டமன்ற உறுப்பினர் அவர்களே..!

என்றென்றும் வேண்டுகிறேன்
செல்வன். மா.மணிகண்டன்
ஆய்க்குடி,
கடையநல்லூர் சட்டமன்ற தொகுதி
(தற்பொழுது அபுதாபில்)

03 June, 2011

நிழல்களான நினைவுகள்...!






நினைவுகளை...
நிழல்களானதை !
நினைவுபடுத்தியது...!

“எப்படி இருக்க...
call பண்ணவே இல்ல”

மாதங்கள் கடந்தவை
கவலைகளை மட்டுமே
சுமந்து சென்றன..!

சுமைகள் கொண்டு
விழிகளிரண்டிலும்
தூக்கத்தின் தாக்கம்
மறந்தே போனாயோ..!

மறந்திருப்பாய்...
மே, ஜீன் மாதங்களை
கடந்த வருடத்தின்..!

நினைவு கூறுகிறேன்...!
நித்திரையின்றி அலைவதை..!

மறக்க முடியவில்லை
விழிகளின் கனவுகளையும்...!
கண்ணீர் துளிகளையும்..!


உனக்கு !
தமிழ் படிக்க பிடிக்காது
என்பது மட்டுமே பிடித்த ஒன்று
எனக்கு !

இதயத்தின் சறுக்களினால்
இந்த கிறுக்கல்கள்...!

பேதையவள் கண்களினால்
மெய் மறந்தே போனேனடி..!

உயிர்மெய்யும்....
மெய்யாகும் பெண்ணே...!
உயிர் குடிக்கும்
விழிகளிரண்டினால்....!

காத்திருக்கிறேன்....மீண்டும் ஒரு மழைக்காலத்திற்காக...!





ஒற்றைக் குடையில்
நடை பழக...!

துவட்ட தந்த
துப்பட்டாவுடன் துயில...!

கவிதைகளை
காகித கப்பலில் படைதொடுக்க...!

காதோரம்
கதகதப்பான கவிதை மொழிய...!

மெழுகுவர்த்தி ஒளியில்
விழிநோக்க...!

காத்திருக்கிறேன்...
மீண்டும் ஒரு மழைக்காலத்திற்க்காக...!

07 May, 2011

ஐந்தின் தொடக்கதில்......


வழி தேடி வந்த பின்
விழி மூடி திறக்கும் முன்
வருடங்கள் கரைந்தோடி விட்டன....
1,2,3,4.......5-ன் தொடக்கத்தில் நான்
நானாக இன்னும்.....

தலைநகரம் சென்னை வரைபடத்தில்
குறியீட்டு காட்ட மட்டும் தெரியும்....




குளு குளு பெங்களூர் செல்ல
குடும்பத்தோடு குலத்தெய்வம் கோவில் சென்று
குட்டி சந்தில் நண்பர்களோடு கும்மாளம் போட்டு....
மொழி தெரியாத இடம் தேடி சென்ற நாள் அது...!

கன்னடத்து பைங்கிளி தவிர
தெரியாது எதுவும்....!

நினைத்தால் சிரிப்புதான் இப்பவும்
விரைவு பேருந்தில் சாய்ந்து உட்கார தெரியாது...
செர்க்கமோ என்று நினைத்த சொகுசு பேருந்தின்
முதல் பயணம்......!

விடைபெறும் முன்.....அப்பாவும், அம்மாவும்...
கண்கள்கூட தாய்மையும், பாசமும் உணர்த்துமா...
உணர்ந்திருக்கின்றேன்......!

அரைகுறை ஆங்கிலமும்....அதிகம் திகட்டிய தமிழுடன்
பெட்டியையும் கட்டிக் கொண்டு....பெங்களூர்......
இன்று பெங்களுரூ ஆகிவிட்டது....!

3226-உடன் கொஞ்சம் கன்னடம், ஆங்கிலம், தமிழ்...
நாட்கள் கடந்தன....
4000 வாங்கினாலும் Account மட்டும் ICICI-ல்...

4....5.5 ஆனது.....மழைக்காலமும் தொடங்கியது...
வார விடுமுறையில் கிரிக்கெட் மட்டும் ஓயவே இல்லை....இன்றும்...

ஒரு வருடம்.....ஐக்கிய அரபு செல்ல அலுவலகத்தில் வாய்ப்புகள்...
கடவுச்சீட்டோடு.....தமிழக அரசின் முத்திரையுடன்
சான்றிதழ் வேண்டுமாம்...
அங்க பிடிச்சு..இங்க பிடிச்சு...
சிங்கார சென்னையாம்......சே...சே.....
தலைமை செயலகத்திலும்
லஞ்சம் நாற்காலியிட்டு அமர்ந்திருக்கிறது..!

அங்க கொஞ்சம், இங்க கொஞ்சம்
பிடுங்கியது போக...மிஞ்சியது
மீண்டும் பெங்களூர் செல்ல மட்டும்...!

ஒரு வழியாக விசாவும் வந்தது...

ஊர் வந்து உற்றார் உறவினர்களுடன் விடைபெற்று...
தங்கைக்கு தைரியம் சொல்லிவிட்டு,
தம்பியுடன் செல்லமாக சண்டையிட்டு விட்டு...
தலைமகனே வள்ளுவனின் வாக்கு பொய்த்ததில்லை என்ற வரிகளோடு விடைபெற்றேன்...

தொடர்வண்டி பயணம் தெரியாது எனக்கு..
முதல் பயணமே விமானத்தில் தான்...!

ஒரு வழியாக பக்ரைன் வழியாக துபாய்...ஆ..துபாய்...
அடேங்கப்பா....இதுதான் துபாயா....!

வெயில் வெயில்னு சொல்லுவாங்களே
இதுதான் அந்த வெயிலா....சாமி...
நம்ம ஊருல அதிகம் வெயில்னு மட்டும் சொல்லாதிங்க...!
ஒரு நாள் இங்க வந்து இருந்து பாருங்க.....!

2,3, நான்கும் முடிந்தது....
உலகத்திலேயே நீளமான முழுவதும் குளிரூட்டப்பட்ட மெட்ரோ ரயில்..துபாய் மெட்ரோ.....இரண்டு
வருடங்கள் Main Design Office in Dubai Metro...பின் அபுதாபி....அமெரிக்காவின் மருத்துவமனை ஒன்று....
இன்றோடு நான்கு வருடங்கள் முடிந்துவிட்டன..எத்தனை நண்பர்கள் இந்தியர்கள் மட்டுமல்ல...
நிறைய கற்றுக்கொண்டேன் வாழ்க்கை பாடம்...

ஏமாற்றுபவர்களையும், ஏமாறுபவர்களையும் கண்டதிலிருந்து....!

பணம் எவனையும் பைத்தியக்காரனாக்கும் என்பது பொய்யல்ல....!

இன்றைய இந்த போட்டி நிறைந்த உலகத்தில்..தினம் தினம் தேடுகிறேன்...எப்போது நான்கு சுழியத்தில் இருந்து...சுழியம் ஐந்தாக மாறும் என்று....எதிர்பார்ப்புகள் தானே வாழ்க்கை....
தினமும் எதிர்பார்ப்புகளுடன்....

21 April, 2011

மனமில்லையா...! மனது இல்லையா..!


காகித கப்பலில் காதலின்
காவிய பயணம்..!

கெஞ்சலும்...
கொஞ்சலும்...
மிஞ்சலுமாய்..!

நிழல் உருவங்களுக்கு
கண்மூடி வண்ணம் தீட்டுகிறாய்
உணர்ச்சிகளோடு..!

தவழ்ந்த மண்ணின்
மல்லிகைக்கு மனமில்லையா...!
இல்லை மனது இல்லையா..! ?

கடைக்கண்ணின் கண்ணீர்
துளிகளால் கவிஞனானேடி பெண்ணே..!

உதிரியாய் போன உலரல்களை
வர்ணித்து வரைவுபடுத்தியது நீதானே..!

நிஜமாய் கலக்கம் அடைந்தேன்
என் மீது காதல் என்றபோது..!

ஏன் என்றேன்..?
தவணையாக பெறும் அன்பதனை
தாராளமாக பெற வேண்டுமென்றாய்..!

பதில் தெரியாமல்
மௌன பதற்றமது
மாற்றம் கொண்டது..!

பாவை மனதை
பாளாக்கி விட்டேனோ..!
எதையோ தொட்டணைத்து
நான் தொடங்கிய
வரிகளால் வாக்குபட வேண்டுமென்கிறாய்..!

பெண்ணே மழை அது
நின்றே போய் விட்டது..
இன்னும் ஏன் குடைவிரித்து நிற்கிறாய்..!

கலக்கம் வேண்டாம்..
கனவுலகில் காதல் காவியம்
படைத்துள்ளேன்...
நாயகி நீதான்...!

விழி பற்றி


வழி தேடி வந்த இடத்தில்
விழி மூடும் முன்
ஒரு செய்தி!
விழி பற்றி விளக்கம் வேண்டும்
என்பது தான் அது!

என் விழி கொண்டு
உன் விழி கண்டு
விரல் ரெண்டு
அமுதுண்டு
பொய்யுரைக்காத வார்த்தைகள்
இவையாவும்...!

கரு விழிக்கும், வாய் மொழிக்கும்
இத்துனை மாற்றங்களா..!
விழிகளோ தாய்மை உணர்த்துகிறது !
வாய் மொழிகளோ பச்சிளம் குழந்தை போல் !

நான் கற்பனையிலும் கணித்திடாத
கரு விழியும் ! வாய் மொழியும் !


அசையாத விழிகள்
நான் கண்ட்து...
புகைப்படம் ரெண்டில்!

உரைப்பது
பொய்யா ! மெய்யா !
சந்தேகம் எனக்கு..!

சந்தேகமும் ! சந்தோஷமும் !
எதிராளியின் விழியசையு கொண்டு..!

உன் விழி
கருணை, காதல்
அன்பு, ஆர்வம்
நட்பு, நேசம்
பாசம், பரிவு
இவையணைத்தின்
ஏணிப் படிகளின்
மேலிருந்து இரண்டாம் படியில்
முதல் படி வெகு தூரம் இல்லை


விழிக்கும், இமைக்கும்
இடையே உள்ள தூரம்ட் தான்
நம் நட்பு போல..!

விழி மூடினாலும்
வழி தேட மறுக்காதே !

உறவுக்கும், உறக்கத்துக்கும்
நேரக் கட்டுப்பாடு வேண்டாமடி !

விழியின்
சில
ஏக்கங்கள், ஏமாற்றங்கள்
நான் அறிந்த்தே !

ஏன் இந்த விழிகளின் மௌன்ங்களை
இத்யத்திற்க்குள் சிறை வைக்கிறாய் !

பறக்க விடு பட்டாம்பூச்சியாய்!
உன் அறையினுள் அல்ல.....!
வெளியுலகம் செல்...
உனக்காக....
உன் விழிக்காக...
புத்தம் புதிய உலகம் ஒன்று !
இப்போதே சன்னல் திற.....!
வெளிச்சம் விழிகளின் வழியே........!
இதயத்திற்க்கும்.

உணவு இடைவேளையில் சில கிறுக்கல்கள்


புவி ஈர்ப்பு விசையால்
நடை பழகிய என்னை
விழி ஈர்ப்பு விசையால்
தவழ செய்தவள் நீ..!


பேனா கொண்டு கைகளில் கிறுக்கி
நாட்கள் பல கடந்து விட்டன..
மீண்டும் கிறுக்குகிறேன்..
ரேகை செல்லும் எல்லாம்
உன் பெயரை மட்டும்..!

அடுக்கடுக்காக அமைந்திருக்கும்
பற்களின் வரிசையில்
கொன்று இழுக்கும்...!
சிங்கப் பல்லின் அழகை ரசிக்க
தினம் ஆயிரம் நகைசுவை துணுக்கை
தேடி நான்..!

அரசிடமிருந்து அவசர செய்தி ஒன்று:
வார விடுமுறைகளில்
நிலவு நண்பணை காணவில்லையென்று..!
மத்திய மாநில அரசின் கூட்டுப்படை ஒன்று
தமிழ்நாட்டில் களமிறங்கியுள்ளது...!
வார நாட்கள் கடந்ததை
கண்ணிமைக்காமல் ஒரே மூச்சில்
விழி வழியோடி என் இதயத்தினுள்
துடிப்பினை துரிதப்படுத்தும்
தேவதையின் விழி காண
அவன் வந்ததாக
தின நாளிதழ் அனைத்திலும்
தலைப்புச் செய்தியடி..!!

உனக்கு பிடித்த நிறம் என்ன..! ..?
என்னோடு உன் வினா இது..!
கருவிழி மட்டும்தான் பிடிக்கும் எனக்கு..!!

நிகழ்காலம் மற்றும் இறந்தகாலம்


கதைகள் என்ன! கவிதைகள் என்ன!
ஒராயிரம் கோடி சொல்லலாம்
இதயத்தின் கதவு திறந்து வந்த போது!!

வைத்தது வலது காலா! இடது காலா!!
தெரியாது எனக்கு!!!
வந்தது வாழ்க்கையை உணர்த்துவதாய்
மட்டுமே தெரிந்த்து எனக்கு!!

என் கவிதையில் மட்டுமல்ல
இதயத்திலும் ஓர் இடமுண்டு....!!
என்னைப் பற்றியும் நினைக்க
இதயமொன்று துடிக்கிறது என்று!!!

ஆயிரம் கனவுகளை நீ புதைத்திருந்தாலும்
இப்போதும் வழியமைக்கிறாய்........
என் எல்லா கனவுகளுக்கும்!!

கனவோடே தொலையும் என்றிருந்தேன்!!
களையாது நினைவாகும் என்றுணர்த்தியவள் நீ!!!!!!!!!

நூறு முறை போடா! போடி!! என்றாலும்
அப்புறம் ! விழுப்புரம்!!!! என்பதே உன் குறும்புகளில் பிடித்தது எனக்கு!!


தொலைபேசியில் நீ உரைத்த
ஆங்கிலச் சொல் ஒன்று
காதினுள் படையெடுக்காததால்
கேட்பேன் என்னவென்று!!
தன்னிடம் கூட நண்பன் இவன்
இழிவுப்படக்கூடாது என்பதற்காக
அழகே உரைப்பாய் என் தாய் வாழ்த்தியது போல! தமிழில்!!!

தாயின் எண்ணங்கள்
தந்தையின் கனிவான கண்டிப்பு
சகோதரனின் செயல் நோக்கங்கள்
சகோதரியின் வாய்மொழி
அனைத்தும் காண்கிறேன் உன்னோடு!!

எண்ணங்களை வார்த்தைகளாகினேன்
எனக்கு தெரிந்த மொழி ஒன்றில்!!

உன்னோடு எனக்கிருந்த உணர்வுகளை
மட்டுமே எழுத்துகளாக்கியுள்ளேன்..!!

உன் சில நொடி மௌனம் போல
என் தமிழும் காலம் பல காத்திருந்தது.!
கருங்கல் படர்ந்த இந்த இதயத்தில்
முட்கள் இல்லாமல் பூத்த ரோஜா செடி போல!!!

நான் எழுதும் கவிதைகள் அனைத்திலும்
கற்பனையும், பொய்யும் உண்டு...ஆனால்
நான் பொய்யுரைக்காத வார்த்தைகள் இவையணைத்தும்..!!


என் முதல் தோழியின் பெயர் மீனா!!
நினைவில் அவள் பெயர் மட்டும்!
காண்கிறேன் அவள் முகம் இன்று!! நீ!!
வருடம் பதினாறு கடந்த பின் கண்டிருக்கிறேன்
காலம் என்னை கடந்த பாதைகே கூட்டிச் சென்றது..!!

மீண்டும் உன் கண்ணீரை தொலைக்காதே!
உன் தலையணைக்குத் தெரியும்
கண்ணீரின் சுவாசமும்! வாய்திறந்து நீ சொல்ல தவிக்கும் வார்த்தைகளும்!!
இன்று எனக்கும் தெரிந்தது!!!!

எனக்காக இரு சொட்டு கண்ணீர் வைத்திரு!
என் நிரந்திர பயணத்தின் தொடக்கத்தில்
உன் அன்பின் அடையாளத்திற்காக!!!

தள்ளி வைத்து விடாதே உன் தலையணையையும்!! என்னையும்....!!!

எதிர்பார்ப்புகளோடு நான்......!!


உன்னோடு ஒரு முறையாவது
நிலாச்சோறு உண்ண வேண்டும்..!!

பௌர்ணமியின் ஒளியில்
கதைகளாயிரம் கதைக்க வேண்டும்..!!

கடற்கரை மணலில் அமைதியாக
ஐந்து நிமிடம்; அலைகளின் தாலாட்டோடு..!!

எனக்கும் ஆவல்தான்
உன் தலைவாரி பூச்சூட..!!

உன் அழுகையோடு
சிரிப்பினை பதிவு செய்த விழாவில்
நீ
பகிரும் முதல் இனிப்பு
எனக்காக இருக்க வேண்டும்..!!

நீ என்னோடு மட்டுமே இருந்துவிடு
உயரமான கட்டிடத்திற்கென்ன..!
உன் பிறந்த வீடான
நிலவிற்கே!!
அழைத்து செல்கிறேன் மறுமுறை..!!

இருவருக்குமே
வருடம் இது
திருப்பமாகவே அமையும்..!!

எதிர்பார்ப்புகளோடுதான் இருக்கிறேன்...

என் காகித கப்பலும்
ஒரு நாள் கரையை அடையும் என்று..!!!

01 January, 2011

நான் கவிஞனா......!!!!




என் கவிதையின் வரிகளுக்கு
உயிரூட்டியவளே நீதானே!

ஏனோ என் பேனாவுக்கும், தமிழுக்கும்
உன் மீதான காதல் மட்டும் இன்றும் அப்படியே!!!

துயிலும் போது என்னோடு உரைத்த
மௌனத்தையே மொழி பெயர்த்தேன்..!!

மௌனத்திற்கே இத்தனை மொழிகள் என்றால்....!
கண்ணின் கருவிழி விளக்க
ஜென்மம் ஏழு எடுத்தாலும் தீராது!!

கைப்பேசிக்கே உயிரளித்தவள் நீ!!
கள்ளன் அவன் காதோடு
முணுமுணுத்த வெட்க மொழி இது!!

தாவணியில் ஒரு கணம் பவனி வந்து பார்...!!
வீட்டின் தரைக்கும் உன் மீது காதல் வரும்..!!

உன் பேச்சுகள் அனைத்தும் தான்!
என் கவிதையின் மூச்சுகள்!!

கவிதைகள் கோடி பல எழுதலாம்
பெண்ணே பற்றி உன்னை!!!
போதாது இவ்வுலக மூங்கில் காடுகள்!!

ஆக்டோபஸின் ஜோசியமும் பொய்க்கும்
உன் விழிக் கண்டு பின் உரைத்தால்!!

மறுமுறை வாராதே சேலையில் முன்பு!
இல்லை என்னோடு இன்னோரு இதயம்!!!!!!!!!

உயிரோடு உணர்ச்சி ஒரு புறம் இருக்க
கவிஞன் இவன் என்றால் தகுமோ!!!

மௌனங்கள் உயிர்தெழுந்தால்.......!




மை தொட்ட
மையல் விழிகளோடுதான்
எத்துனை கவிதகளடி...!

முகப்பூச்சு தவிர்த்து
நீ
வெட்கம் கொண்டதால்
ஏனோ....
வரிகள் அது
மௌனங்களாகவே...!

என் மௌனங்கள்
உயிர்தெழுந்தால்..!
கைதியாயிருப்பேன் என்றோ...!

மௌனங்களுடன்......

மௌனம் கலைத்த தேவதை......!!!!




ஆயிரம் விளக்குகள்
என் திசை நோக்கி...
ஆனாலும் நிழல் இல்லா..
நிசப்தமான தேகம் பெற்றேனடி..!

பேனா மீதும் பேரன்பு..!
அமாவசையிலும் முழு நிலவு..!

தாவணி கொண்ட தமிழ் கண்டு
தரணி மொழிகளெல்லாம்
தாயகம் தவிர்க்க தயாராகிவிட்டது..!

நீ சூடி கலைந்த
மல்லிகைக்கும், மணிமகுடம்..!
மௌன பேரரசர்..!

காலனும் கவிதை வடிப்பான்
பெண்ணே ! உன் கண்களால்.!

சரித்திர காவியமாகும், என் கவிதையும்
என் காதலால்...உன்னோடு...!