அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

21 April, 2011

மனமில்லையா...! மனது இல்லையா..!


காகித கப்பலில் காதலின்
காவிய பயணம்..!

கெஞ்சலும்...
கொஞ்சலும்...
மிஞ்சலுமாய்..!

நிழல் உருவங்களுக்கு
கண்மூடி வண்ணம் தீட்டுகிறாய்
உணர்ச்சிகளோடு..!

தவழ்ந்த மண்ணின்
மல்லிகைக்கு மனமில்லையா...!
இல்லை மனது இல்லையா..! ?

கடைக்கண்ணின் கண்ணீர்
துளிகளால் கவிஞனானேடி பெண்ணே..!

உதிரியாய் போன உலரல்களை
வர்ணித்து வரைவுபடுத்தியது நீதானே..!

நிஜமாய் கலக்கம் அடைந்தேன்
என் மீது காதல் என்றபோது..!

ஏன் என்றேன்..?
தவணையாக பெறும் அன்பதனை
தாராளமாக பெற வேண்டுமென்றாய்..!

பதில் தெரியாமல்
மௌன பதற்றமது
மாற்றம் கொண்டது..!

பாவை மனதை
பாளாக்கி விட்டேனோ..!
எதையோ தொட்டணைத்து
நான் தொடங்கிய
வரிகளால் வாக்குபட வேண்டுமென்கிறாய்..!

பெண்ணே மழை அது
நின்றே போய் விட்டது..
இன்னும் ஏன் குடைவிரித்து நிற்கிறாய்..!

கலக்கம் வேண்டாம்..
கனவுலகில் காதல் காவியம்
படைத்துள்ளேன்...
நாயகி நீதான்...!

விழி பற்றி


வழி தேடி வந்த இடத்தில்
விழி மூடும் முன்
ஒரு செய்தி!
விழி பற்றி விளக்கம் வேண்டும்
என்பது தான் அது!

என் விழி கொண்டு
உன் விழி கண்டு
விரல் ரெண்டு
அமுதுண்டு
பொய்யுரைக்காத வார்த்தைகள்
இவையாவும்...!

கரு விழிக்கும், வாய் மொழிக்கும்
இத்துனை மாற்றங்களா..!
விழிகளோ தாய்மை உணர்த்துகிறது !
வாய் மொழிகளோ பச்சிளம் குழந்தை போல் !

நான் கற்பனையிலும் கணித்திடாத
கரு விழியும் ! வாய் மொழியும் !


அசையாத விழிகள்
நான் கண்ட்து...
புகைப்படம் ரெண்டில்!

உரைப்பது
பொய்யா ! மெய்யா !
சந்தேகம் எனக்கு..!

சந்தேகமும் ! சந்தோஷமும் !
எதிராளியின் விழியசையு கொண்டு..!

உன் விழி
கருணை, காதல்
அன்பு, ஆர்வம்
நட்பு, நேசம்
பாசம், பரிவு
இவையணைத்தின்
ஏணிப் படிகளின்
மேலிருந்து இரண்டாம் படியில்
முதல் படி வெகு தூரம் இல்லை


விழிக்கும், இமைக்கும்
இடையே உள்ள தூரம்ட் தான்
நம் நட்பு போல..!

விழி மூடினாலும்
வழி தேட மறுக்காதே !

உறவுக்கும், உறக்கத்துக்கும்
நேரக் கட்டுப்பாடு வேண்டாமடி !

விழியின்
சில
ஏக்கங்கள், ஏமாற்றங்கள்
நான் அறிந்த்தே !

ஏன் இந்த விழிகளின் மௌன்ங்களை
இத்யத்திற்க்குள் சிறை வைக்கிறாய் !

பறக்க விடு பட்டாம்பூச்சியாய்!
உன் அறையினுள் அல்ல.....!
வெளியுலகம் செல்...
உனக்காக....
உன் விழிக்காக...
புத்தம் புதிய உலகம் ஒன்று !
இப்போதே சன்னல் திற.....!
வெளிச்சம் விழிகளின் வழியே........!
இதயத்திற்க்கும்.

உணவு இடைவேளையில் சில கிறுக்கல்கள்


புவி ஈர்ப்பு விசையால்
நடை பழகிய என்னை
விழி ஈர்ப்பு விசையால்
தவழ செய்தவள் நீ..!


பேனா கொண்டு கைகளில் கிறுக்கி
நாட்கள் பல கடந்து விட்டன..
மீண்டும் கிறுக்குகிறேன்..
ரேகை செல்லும் எல்லாம்
உன் பெயரை மட்டும்..!

அடுக்கடுக்காக அமைந்திருக்கும்
பற்களின் வரிசையில்
கொன்று இழுக்கும்...!
சிங்கப் பல்லின் அழகை ரசிக்க
தினம் ஆயிரம் நகைசுவை துணுக்கை
தேடி நான்..!

அரசிடமிருந்து அவசர செய்தி ஒன்று:
வார விடுமுறைகளில்
நிலவு நண்பணை காணவில்லையென்று..!
மத்திய மாநில அரசின் கூட்டுப்படை ஒன்று
தமிழ்நாட்டில் களமிறங்கியுள்ளது...!
வார நாட்கள் கடந்ததை
கண்ணிமைக்காமல் ஒரே மூச்சில்
விழி வழியோடி என் இதயத்தினுள்
துடிப்பினை துரிதப்படுத்தும்
தேவதையின் விழி காண
அவன் வந்ததாக
தின நாளிதழ் அனைத்திலும்
தலைப்புச் செய்தியடி..!!

உனக்கு பிடித்த நிறம் என்ன..! ..?
என்னோடு உன் வினா இது..!
கருவிழி மட்டும்தான் பிடிக்கும் எனக்கு..!!

நிகழ்காலம் மற்றும் இறந்தகாலம்


கதைகள் என்ன! கவிதைகள் என்ன!
ஒராயிரம் கோடி சொல்லலாம்
இதயத்தின் கதவு திறந்து வந்த போது!!

வைத்தது வலது காலா! இடது காலா!!
தெரியாது எனக்கு!!!
வந்தது வாழ்க்கையை உணர்த்துவதாய்
மட்டுமே தெரிந்த்து எனக்கு!!

என் கவிதையில் மட்டுமல்ல
இதயத்திலும் ஓர் இடமுண்டு....!!
என்னைப் பற்றியும் நினைக்க
இதயமொன்று துடிக்கிறது என்று!!!

ஆயிரம் கனவுகளை நீ புதைத்திருந்தாலும்
இப்போதும் வழியமைக்கிறாய்........
என் எல்லா கனவுகளுக்கும்!!

கனவோடே தொலையும் என்றிருந்தேன்!!
களையாது நினைவாகும் என்றுணர்த்தியவள் நீ!!!!!!!!!

நூறு முறை போடா! போடி!! என்றாலும்
அப்புறம் ! விழுப்புரம்!!!! என்பதே உன் குறும்புகளில் பிடித்தது எனக்கு!!


தொலைபேசியில் நீ உரைத்த
ஆங்கிலச் சொல் ஒன்று
காதினுள் படையெடுக்காததால்
கேட்பேன் என்னவென்று!!
தன்னிடம் கூட நண்பன் இவன்
இழிவுப்படக்கூடாது என்பதற்காக
அழகே உரைப்பாய் என் தாய் வாழ்த்தியது போல! தமிழில்!!!

தாயின் எண்ணங்கள்
தந்தையின் கனிவான கண்டிப்பு
சகோதரனின் செயல் நோக்கங்கள்
சகோதரியின் வாய்மொழி
அனைத்தும் காண்கிறேன் உன்னோடு!!

எண்ணங்களை வார்த்தைகளாகினேன்
எனக்கு தெரிந்த மொழி ஒன்றில்!!

உன்னோடு எனக்கிருந்த உணர்வுகளை
மட்டுமே எழுத்துகளாக்கியுள்ளேன்..!!

உன் சில நொடி மௌனம் போல
என் தமிழும் காலம் பல காத்திருந்தது.!
கருங்கல் படர்ந்த இந்த இதயத்தில்
முட்கள் இல்லாமல் பூத்த ரோஜா செடி போல!!!

நான் எழுதும் கவிதைகள் அனைத்திலும்
கற்பனையும், பொய்யும் உண்டு...ஆனால்
நான் பொய்யுரைக்காத வார்த்தைகள் இவையணைத்தும்..!!


என் முதல் தோழியின் பெயர் மீனா!!
நினைவில் அவள் பெயர் மட்டும்!
காண்கிறேன் அவள் முகம் இன்று!! நீ!!
வருடம் பதினாறு கடந்த பின் கண்டிருக்கிறேன்
காலம் என்னை கடந்த பாதைகே கூட்டிச் சென்றது..!!

மீண்டும் உன் கண்ணீரை தொலைக்காதே!
உன் தலையணைக்குத் தெரியும்
கண்ணீரின் சுவாசமும்! வாய்திறந்து நீ சொல்ல தவிக்கும் வார்த்தைகளும்!!
இன்று எனக்கும் தெரிந்தது!!!!

எனக்காக இரு சொட்டு கண்ணீர் வைத்திரு!
என் நிரந்திர பயணத்தின் தொடக்கத்தில்
உன் அன்பின் அடையாளத்திற்காக!!!

தள்ளி வைத்து விடாதே உன் தலையணையையும்!! என்னையும்....!!!

எதிர்பார்ப்புகளோடு நான்......!!


உன்னோடு ஒரு முறையாவது
நிலாச்சோறு உண்ண வேண்டும்..!!

பௌர்ணமியின் ஒளியில்
கதைகளாயிரம் கதைக்க வேண்டும்..!!

கடற்கரை மணலில் அமைதியாக
ஐந்து நிமிடம்; அலைகளின் தாலாட்டோடு..!!

எனக்கும் ஆவல்தான்
உன் தலைவாரி பூச்சூட..!!

உன் அழுகையோடு
சிரிப்பினை பதிவு செய்த விழாவில்
நீ
பகிரும் முதல் இனிப்பு
எனக்காக இருக்க வேண்டும்..!!

நீ என்னோடு மட்டுமே இருந்துவிடு
உயரமான கட்டிடத்திற்கென்ன..!
உன் பிறந்த வீடான
நிலவிற்கே!!
அழைத்து செல்கிறேன் மறுமுறை..!!

இருவருக்குமே
வருடம் இது
திருப்பமாகவே அமையும்..!!

எதிர்பார்ப்புகளோடுதான் இருக்கிறேன்...

என் காகித கப்பலும்
ஒரு நாள் கரையை அடையும் என்று..!!!