அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

07 May, 2011

ஐந்தின் தொடக்கதில்......


வழி தேடி வந்த பின்
விழி மூடி திறக்கும் முன்
வருடங்கள் கரைந்தோடி விட்டன....
1,2,3,4.......5-ன் தொடக்கத்தில் நான்
நானாக இன்னும்.....

தலைநகரம் சென்னை வரைபடத்தில்
குறியீட்டு காட்ட மட்டும் தெரியும்....




குளு குளு பெங்களூர் செல்ல
குடும்பத்தோடு குலத்தெய்வம் கோவில் சென்று
குட்டி சந்தில் நண்பர்களோடு கும்மாளம் போட்டு....
மொழி தெரியாத இடம் தேடி சென்ற நாள் அது...!

கன்னடத்து பைங்கிளி தவிர
தெரியாது எதுவும்....!

நினைத்தால் சிரிப்புதான் இப்பவும்
விரைவு பேருந்தில் சாய்ந்து உட்கார தெரியாது...
செர்க்கமோ என்று நினைத்த சொகுசு பேருந்தின்
முதல் பயணம்......!

விடைபெறும் முன்.....அப்பாவும், அம்மாவும்...
கண்கள்கூட தாய்மையும், பாசமும் உணர்த்துமா...
உணர்ந்திருக்கின்றேன்......!

அரைகுறை ஆங்கிலமும்....அதிகம் திகட்டிய தமிழுடன்
பெட்டியையும் கட்டிக் கொண்டு....பெங்களூர்......
இன்று பெங்களுரூ ஆகிவிட்டது....!

3226-உடன் கொஞ்சம் கன்னடம், ஆங்கிலம், தமிழ்...
நாட்கள் கடந்தன....
4000 வாங்கினாலும் Account மட்டும் ICICI-ல்...

4....5.5 ஆனது.....மழைக்காலமும் தொடங்கியது...
வார விடுமுறையில் கிரிக்கெட் மட்டும் ஓயவே இல்லை....இன்றும்...

ஒரு வருடம்.....ஐக்கிய அரபு செல்ல அலுவலகத்தில் வாய்ப்புகள்...
கடவுச்சீட்டோடு.....தமிழக அரசின் முத்திரையுடன்
சான்றிதழ் வேண்டுமாம்...
அங்க பிடிச்சு..இங்க பிடிச்சு...
சிங்கார சென்னையாம்......சே...சே.....
தலைமை செயலகத்திலும்
லஞ்சம் நாற்காலியிட்டு அமர்ந்திருக்கிறது..!

அங்க கொஞ்சம், இங்க கொஞ்சம்
பிடுங்கியது போக...மிஞ்சியது
மீண்டும் பெங்களூர் செல்ல மட்டும்...!

ஒரு வழியாக விசாவும் வந்தது...

ஊர் வந்து உற்றார் உறவினர்களுடன் விடைபெற்று...
தங்கைக்கு தைரியம் சொல்லிவிட்டு,
தம்பியுடன் செல்லமாக சண்டையிட்டு விட்டு...
தலைமகனே வள்ளுவனின் வாக்கு பொய்த்ததில்லை என்ற வரிகளோடு விடைபெற்றேன்...

தொடர்வண்டி பயணம் தெரியாது எனக்கு..
முதல் பயணமே விமானத்தில் தான்...!

ஒரு வழியாக பக்ரைன் வழியாக துபாய்...ஆ..துபாய்...
அடேங்கப்பா....இதுதான் துபாயா....!

வெயில் வெயில்னு சொல்லுவாங்களே
இதுதான் அந்த வெயிலா....சாமி...
நம்ம ஊருல அதிகம் வெயில்னு மட்டும் சொல்லாதிங்க...!
ஒரு நாள் இங்க வந்து இருந்து பாருங்க.....!

2,3, நான்கும் முடிந்தது....
உலகத்திலேயே நீளமான முழுவதும் குளிரூட்டப்பட்ட மெட்ரோ ரயில்..துபாய் மெட்ரோ.....இரண்டு
வருடங்கள் Main Design Office in Dubai Metro...பின் அபுதாபி....அமெரிக்காவின் மருத்துவமனை ஒன்று....
இன்றோடு நான்கு வருடங்கள் முடிந்துவிட்டன..எத்தனை நண்பர்கள் இந்தியர்கள் மட்டுமல்ல...
நிறைய கற்றுக்கொண்டேன் வாழ்க்கை பாடம்...

ஏமாற்றுபவர்களையும், ஏமாறுபவர்களையும் கண்டதிலிருந்து....!

பணம் எவனையும் பைத்தியக்காரனாக்கும் என்பது பொய்யல்ல....!

இன்றைய இந்த போட்டி நிறைந்த உலகத்தில்..தினம் தினம் தேடுகிறேன்...எப்போது நான்கு சுழியத்தில் இருந்து...சுழியம் ஐந்தாக மாறும் என்று....எதிர்பார்ப்புகள் தானே வாழ்க்கை....
தினமும் எதிர்பார்ப்புகளுடன்....

No comments: