அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

04 June, 2013

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 7





உனது பெயரை சொல்லும்
மண் சிலை ஒன்றினை
எனது வீட்டு அலமாரியில் குடியிருத்திருக்கிறேன்
அடுக்களை வரை உனது குடியுரிமை
பெறும் வரையில் இருந்துவிட்டு போகட்டுமே !



காற்றாடி கண்டுபிடித்தவன் நானாகியிருந்தால்
உனது காதோர தலைமுடியின்
முதல் விதி என்று பதிவு செய்திருப்பேன் !



நான் படிக்கும்
இரண்டு பக்க நாளிதழ் நீயடி !
முதல் பக்கத்தினையே இன்னும்
எழுத்துக்கூட்டி வாசித்து கொண்டிருக்கிறேன் !



வாரத்தின் மலர் என்பதை
என்னால் ஏற்க முடியவில்லை
வானத்தின் மலர் என்பதே
சரியான கூற்று ஆகும் !



மலரின் மென்மையினை
உன் விரல் பிடித்து
இடுப்பளவு வளர்ந்திருந்த
பருத்திகிடையே நடந்த போது
சற்று முன் வெடித்த இளவம் பஞ்சின்
இனம் சொன்னதடி எனக்கு !



மீன்களுக்கு அன்னமிடும்
கயல்மீன் விழியாளை கண்ட
கொக்குகள் அனைத்தும் நீரின் மேல்
ஒற்றை காலில் தவம் கிடக்கின்றனவாம் !



இரண்டு அடிகளில் உனக்காக
எழுத முயன்று தோற்கிறேனடி
வள்ளுவனே மனைவிக்கு
நான்கு அடிகளில்தான் எழுதியிருக்கிறார் !



உனது இமைகளுக்கான கர்வம்
எனது பேனாவுக்கும் வந்திருப்பதாக தெரிகிறது
அதிகமாக உனது விழிகளை பற்றியே
ஆராய்ந்து கொண்டிருப்பதால் !



நான் வெறுத்த மீன் உணவை
நீ நிறுத்தியது அறிந்து
மீன்கள் நீர் துறந்து உண்ணாவிரதம் இருக்க
அனைத்துவகை மீன்கள் சங்கமும்
அறிவிப்பு வெளியிட்டுள்ளது !



உனை பார்த்ததுமே
காதல் சுரப்பிகள் அனைத்தும்
அன்னிச்சை செயலென
ஆதரவு கொடி தூக்கி
காதல் அணுக்களுக்கு எல்லாம்
ஆயுதம் விநியோகம் செய்கின்றது !



No comments: