அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

30 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 6



எங்கிருந்து கற்றுக்கொண்டனவோ
உன் விழிகள் வெட்கத்தினை
என்னை வெட்கப்படவைப்பதில்
மருத்துவப்பட்டம் பெற்றுவிட்டது !



வீட்டை விட்டு கிளம்பும்போது
ஐம்பது அடி இடைவெளி
ஐயர் தெரு வரும்போது
ஐந்து அடி இடைவெளி
கோவில் வாசலில்
காலணிகளை ஒன்றாக கழற்றி வைக்கின்றோம்
கடவுளே காதல் கோட்பாட்டினை
கற்று விட்டேன் நானும் !



உனது கண்ணக்குளியில்
சேமித்து வைத்திருக்கும் நமது காதலை
உனது அண்ணன் வீட்டு
மாமரத்தில் இருக்கும் தேனீக்கள் திருடி செல்ல
வரைபடம் கொண்டு ஆலோசனை செய்து வருகிறதாம் !



என்னை கண்டதும் மறைந்து நிற்கையில்
உனது வெட்கத்தின் சாரலில்
எனது இதயத்தின் பரப்பளவு நனைந்து கிடக்கிறது !



பரிணாம வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு
நமது காதல் போதுமே..நாம் எனும்
சொ(செ)ல் கொண்டு தொடங்கியது !



உனது விழிகளை பற்றி எழுவதனால்
கருவம் கொண்டு எனது பேனா
வேறெதுவும் எழுதிடாமல் பேனாவோடு
அணிசேராமல் அமைதி காக்கிறது !



காதலினை உட்கொண்டு
புன்னகைக்கும் உன் இதழ்களுக்கு
வியர்வையின் கோட்பாடு தெரியாமலிருக்கலாம்
ஆனால் தேனின் மூலக்கூறு வாய்பாடு தெரியும்போல..!



எனக்கான கவிதை வடிப்பில்
ஆழ்ந்து நீ சிந்திக்கும் போது
கவனிப்பின்றி கிடந்த காகிதங்கள்
காற்றினோடு சண்டையிட்டு
உன் முன்னால் மண்டியிட்டு கிடக்கின்றன !



எனது சொக்காப்பை நண்பனை
இரு விரல்களுக்கிடையே நிறுத்தி
ஒரு விரல் கொண்டு அழுத்தி
அழகாக கிறுக்குகிறாய் மௌனத்தினை
மற்ற ஏழு விரல்களின் அனல் கொண்ட பார்வையினை
தாங்கமுடியவில்லை பேனா மையது
விரைவு தந்தியினை அனுப்பியிருக்கிறது !



சற்று முன் இறந்த
உனது உதட்டு சொற்கள் அனைத்தினையும்
காற்று குறிப்பு எடுத்து சென்றுள்ளது
காற்றின் ஆண்டுவிழாவில்
வெளியிடப்பட இருக்கும் வரலாற்று நாவலில்
அட்டைபடம் உனக்கென ஒதுக்கப்பட்டுள்ளதாம்
சிறப்பு விருந்தினராக எனக்கும் அழைப்பு உண்டு !



ஆசையாய் உனக்கென கரையாளர் தோப்பில்
மாங்காய் திருடிவந்தேன்
பத்திரமய் அரிசி பானைக்குள் வைத்துவிட்டாய்
முறைத்து பார்த்தோம் நானும் மாங்காவும்
பாதி கடித்து நீ தருவாய் என எதிர்பார்த்திருந்தோம் !



No comments: