அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

29 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 5



மொட்டை மாடியில் மெழுகுவர்த்தி ஒளியில்
காதல் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும்
அமைத்து கொடுத்த மின்சார வாரியத்திற்க்கு
விழா கமிட்டியாளர்கள் சார்பாக
மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்களாமே !



கோவிலில் சர்க்கரை பொங்கள்
ஊட்டிய போது மாட்டிக்கொண்டோம்
ஊர் ஐக்கிய சங்க தலைவரிடம்
குழந்தை வேண்டி பாயாசம் போடுடா
எல்லாம் நல்லாவரும் வாழ்த்தி போனபோதுதான்
பொங்கலின் இனிப்பு தித்தித்தது..தேனாய் !



படித்துக்கொண்டே நாம் படித்த பள்ளியிலே
பகுதிநேர ஆசிரியராக பணியாற்றுவதுதான் சரிதான்
மாலையில் நான் அமர்ந்து போசும்
மர நிழலில் காற்றினோடு கவிதை பாடுகிறாயாமே
தென்றலின் அண்மைச் செய்திகுறிப்பு இது !



உனக்கான கவிதை தொகுப்புகளோடு
பல ஆயிரம் அடி உயரம் பறந்து
சில ஆயிரம் மைல் கடந்து வந்தாலும்
உனது விழியினில் எனை கண்டதும் வரும் முதல் துளிக்கு
என்னால் எதுவுமே செய்ய முடிவதில்லை அது ஏனோ !



ஓடி வந்து சுற்றி பார்த்துவிட்டு
அருகினில் அமர்ந்து எனது தோளில்
சாய்ந்து கொண்டு கேட்பாய் எப்படி இருக்க..
பதினோறு மாதங்களுக்குபின் சுவாசம் பெறுகின்றேன்
மலரே நீ உதிர்த்த சுவாசத்தினால் !



நீ கற்ற வேதியியலை
அடுக்களையில் முயற்ச்சிக்காதே
பாவம் மாமாவுக்கு
உப்பு காரம் அதிகம் ஆகாது !



நான் வாங்கி வந்த
மலர் செடிகள் எதுவுமே பூக்கவில்லை
பூவே உனை கண்டபின்
நமக்கு இங்கு இடம் இல்லையென
பூக்களின் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாம் !



உனது சிங்கப்பல்லின்
சிநேகம் பிடிக்குமாம்
எனது வீட்டில் காய்த்த கொய்யாப்பழத்திற்க்கு !



உனக்காய் நான் வாங்கிய
கண்ணாடி வளையல்களை
ஆசையோடு அத்தைமகள் கேட்கிறாள் என
அம்மாவோடு அத்தையும் வாங்கி கொடுக்க
வாங்கியதோடு கை முழுவதும்
அடுக்கிவைத்து ஆட்டிகாட்டிட
அருள் கந்தனுக்கு வந்ததோ இல்லையோ
தாவணி கட்டிய கன்னி தமிழச்சிக்கு வந்தது !



அத்தை மகளுக்கு கொடுத்த வளையயெல்லாம்
கூட்டத்தில் உடைந்து விட்டாதாம்
உனது கோபம் உன்னுடைய தங்கை வடிவில்
அவதாரம் எடுப்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை !



No comments: