அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

25 July, 2010

தோளோடு ஒரு பயணம்


கதிரவனுக்கு விடை கொடுத்து
வெண்ணிலவின் வருகைக்காக
காத்திருக்கும் அழகான மாலைப்பொழுது !!

இனியவனோடு மணமுடித்து இன்பமயமான
வாழ்வினை தொடங்கிய தோழியை
வாழ்த்துகளோடு வழியனுப்ப
நரைமுடிகளோடு இளசுகளும் சேர்ந்து
தொடங்கினோம் பயணத்தை....!!!

பயணத்தின் முன்னே என்னே படபடப்பு !
மூன்று மணி நேர நெடுஞ்சாலை
பயணத்தின் போது உன் முகம் காண முடியுமா?....!!
என்ற படபடப்பே அது....!!!

தேவதையின் அருகில் அமரவே
தூதுவிட்டான் காதலின் தேவதூதன்..!!
அந்த ஒரு நொடியில் போட்ட்தடி ஆட்டம்
என் இதயம் ஈரேழு உலகத்திற்க்கும் சென்று..!!!

அருகினிலே அமரும் முன் ஓரக்கண்ணால்
ஒரு பார்வை ஒரே நொடியில் சாய்த்துவிட்டாய்..!!
இதயத்துடிப்பின் வேகம் ஒளியின்
வேகத்தையும் மிஞ்சியது..!!!

பிறவியின் பயனையே அடைந்த
ஒருவனாக அமர்ந்திருந்தேன்..!!

அடக்கமாய் அமரு என்றது மூளை
உள்ளதை கொட்டிவிடு என்றது இதயம்
இவ்விரண்டுடன் சண்டையிட்டுச் கொண்டு
புன் சிரிப்புடன் மட்டுமே என் உதடுகள்...!!!

பின்னால் நாம் அமர்ந்திருந்ததால்
பார்வைகள் ஒன்றும் நம்மீதில்லை..!!
இடப்ப்றத்திலோ கல்லூரி நண்பன்
அருகிலோ அவனது காதலி....!!
காலத்தின் கடமையறிந்த நண்பன்
இனிதே பேச தொடங்கினான் காதலியுடன்..!!!

செய்வதே அரியாமல் நீ என்னுடன்
கொண்ட செய்திகளை எல்லாம்
என் கைபேசியின் மூலம்.....
நினைவுப்படுத்திக் கொண்டிருந்த நேரம்..!!

ஜன்னலின் வழியே இதமாய்
படையெடுத்த தென்றலின் ஈரம்
உன் மூச்சுக் காற்றோடு என்னை தாக்கியது..!!
மூச்சுக் காற்றின் மணமறியும் முன்னே தேவதையின்
காதோரமுடி என் கண்ணத்தில் ஓர் சிறிய வருடல்......
ஒரு நொடி நின்று துடித்த்து என் இதயம்..!!!!

பயணத்தின் தொடக்கத்தில்
எத்துனையோ சலசலப்புகள்..
தொடங்கிய சிறிது நேரத்தில்
அனைவருமே இரவின் மடியினில்..!!!

வாகனத்தின் விளக்கோ
வாசலை தாண்டி சென்றுவிட்ட்து...!!
பௌர்ணமியின் வெண்மையோ
தேவதையி முகத்தில்......!!!!

சிறுவயதில் சோறு ஊட்டும் போது
அம்மா சொன்ன கதை...
தேவதை தூங்கும் போது கூட அழகாக் இருப்பாள்!!!
இன்று தான் உணர்ந்தேன் உன்னில்.....!!!!!

இரவின் மடியினில் உன் நினைவுகளை
ரசித்துக் கொண்டிருந்த நேரம்..........!!
வலது தோளிலோ மல்லிகை வாசம்
வாசத்தின் வரவை அறிய கண்ணோக்கியப்போது......!!
தோளிலோ.........தேவதை.............!!!!!
இமுறை துடிப்புகளில் மட்டுமல்ல
இதயமே இடம் மாறிச் சென்றது...!!!
ஒரு பக்கம் இன்பம்; மறுபக்கம் துன்பம்..!
இதயத்துடிப்பின் ஓசை கேட்டு தேவதை
தன் கண் விழிப்பாளே என்று.....!!!!!!!!!!!!

நான் சுவாசிப்பதையே நிறுத்தினேன்
இருந்தும் துடித்தது இதயம்.....!!
நீ சுவாசித்துக் கொண்டிருந்ததால்..!!!!!!!!!

தவம் என்ன செய்தேனோ..
நிலவின் ஒளியில் உன் முகம் காண்...
நீண்ட நாள் ஆசை உன் கண்ணம் கிள்ள...
கையெடுத்தேன்.........நிலவின் ஒளியோ மாறியது....
வாகனத்தின் வேகமோ குறைந்த்து...
வெள்ச்சமோ வாசல் தாண்டி உள்ளே வந்த்து.....!!!!!

நரைமுடிகளின் சலசலப்புகளோ
இரட்டை மாட்டுவண்டியாய் தொடங்கியது!!!!
தேவதையோ கண்விழித்தால்
பின் தோள் மீது பதித்த முகம் தன்னை எடுத்து
மீண்டும் அதே ஓரக்கண்ணால்
ஒரு பார்வை...........................!!!!!!!!!!!!!
பார்வையின் அர்த்தம் தான் என்ன...?????....!!!!!!!

விடைப் பெற்ற தோழி விமான நிலையத்தின்
உள்ளே இனியவனோடு ஒய்யாரமாய் நடந்தால்..!!
மீண்டும் நடந்தோம் அனைவரும்
வாகனத்தின் திசை நோக்கி..!!!

நரைமுடிகளின் பின்னே நடை தொடர்ந்தபோது
யாருமே அறியாதவாறு என் கைப்பற்றி.......
கண்ணம் கிள்ளினாய்.....................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

மணி எழுந்திரு TIME IS NOW 6.30 GET UP GET UP…..OFFICE போகனும்.....எழுந்திரு...

என் தேவதையோடு பயணத்தை ஒரு கிள்ளலுடன் முடித்தான் என் நண்பன்....
பாவம் அவனுக்கு என்ன தெரியும்......மீண்டும் இன்று இரவு தொடங்கும் என்ற
எண்ணங்களோடே.....தொடங்கினேன் இன்றைய பணிகளை...புன்னகையுடன்.....
மீண்டும் என் தோளோடு உன் பயணம் தொடரும்.................

09 July, 2010

என்னை மறந்து விடாதே..!



பேனாவோடு எனக்கிருந்த
நட்பின் ஆழம் அதிகமாய் உள்ளது
சில நேரம் வெட்கப் புன்னகையில்
பேனாவின் முகம் கூட சிவந்து போகிறது
உன்னைப் பற்றிய உரைகளினால்..!

உரைகளின் வரிகள் சுருக்கமானால்
கரைகிறது
சொக்காப் பையில் நீல நிறமாய்..!
நிறங்கள் மாறினாலும் வலிகள் மட்டும்
என்றும் மாறாமல்..!

அடிக்கடி உன் நினைவால் துடிக்க மறக்கும்
இதயத்தை தன் கண்ணீர் கொண்டே
நனைத்து அழைத்து வருகிறது பூமிக்கு
உன்னைப் பற்றிய உரைகளை தொடர..!

உன்னைப் பற்றிய வரிகளில் மட்டும்
நிறப்பிரிகையை மிஞ்சும் அளவுக்கு
புதுசாய் வண்ணங்களை
தன்னுள்ளே உருவாக்கிக் கொள்கிறது...!
வண்ணங்களை வகைப்படுத்த
அறிவியல் விஞ்ஞானிகளின்
படையெடுப்பு என் வீட்டின் முன்னே
திருவிழாவைப் போல் உள்ளது..!

வாரம் சென்ற பின்னும்
தனக்கான பதில் மட்டும்
இன்னும் வரவில்லையே என்று
எண்ணி நேற்றைய மாலை
மரணத்தை தழுவினானடி பெண்ணே!
என் நண்பன்..!

அவன் போகும் போது உனக்காக
எழுதிய கடைசி கவிதை கண்ணீருடன்
“ என்னை மறந்து விடாதே “
என்றும்..!
என்றென்றும்..!