அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

05 June, 2013

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 8





எனது கவிதையில் ஏற்படும்
வானிலை மாற்றங்கள் அத்தனைக்கும்
உனது பெயரையே எனது பேனா முன்மொழிகின்றது !



காலையில் நீ கோவில் செல்லும் வழி
தெருக்கள் அனைத்திலும் காற்றின் முனுமுனுப்புகள்
காதோரம் களைப்பாரிட கண்டேன்
தென்றலினை தழுவி செல்லும் தென்றல் நீயென !



மொட்டுகள் பிறந்து விரிந்து
உனது கூந்தல் விட்டு விலகும் சோகத்தில் வாடி
காவி நிறம் அணிந்ததை கண்டேன்
வினவிய போது மொட்டுகள் மனம் திறக்கும் இடம்
உனது தலைமுடி என குறிப்பு கிடைத்தது !



மழித்தலில் ஆர்வம் இல்லையடி என்றேன்
உச்சி வெயிலென கூட பாராமல்
எனது கண்ணங்களை பதம் பார்த்தது
உனது அப்பாவின் முகம் துடைக்கும் கத்தி !



நீ வளையல் களையும் வேளையில்
மணிக்கட்டிடம் வேண்டுகிறது வளையல்
வழிவிடாதே என்றும்
வளைந்து கொடுக்காதே என்றும் !



முத்துமணி வைத்த காதணி அணிவது
நீயாக மட்டும்தான் இருக்கும்
எனது பெயர் கொண்ட அணிகலன்கள் அணிவதென
காதல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்துள்ளாயாமே !



உனது விழிகளிரண்டும்
கவிதையாக பிறந்தவை என்பதை
மெய்ப்பிப்பது போல அவ்வப்போது
குறிப்பிட முடியாத சில அலைவரிசை எண்ணில்
எனது விழிகளோடு ஆரவாரம் செய்யும் !



பேராரவாரத்துடன் காத்திருந்தோம்
மாலை நான்கு மணி வரை
நானும் உனது வீட்டு நாய் குட்டியும்
வந்ததும் நல்ல துணையோடு காத்திருகிறாய் என்றாய்
இல்லையடி நல்ல துணைக்காக காத்திருக்கிறேன் என்றேன் !



அடுத்த தெரு அங்காடிக்கு அவசரமாய் வாவென்று
குறுஞ்செய்தியி அனுப்பியிருந்தாய்
பதபதைத்து வர ஊரெங்கும் விற்காத
உனக்கு பிடித்த தேன் மிட்டாய் இங்கு கிடைக்குமென்றாய் !



நாகரிகம் கலந்த இன்றைய சூழலிலும்
என்னை பெயர் சொல்லி அழைக்க மறுத்து
பண்பாடு மறவாது பகுத்தறிந்து பேசிடும்
புதுமையே நீ தமிழ் பதுமை என்பதில் ஐயமில்லை !



No comments: