அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

30 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 6



எங்கிருந்து கற்றுக்கொண்டனவோ
உன் விழிகள் வெட்கத்தினை
என்னை வெட்கப்படவைப்பதில்
மருத்துவப்பட்டம் பெற்றுவிட்டது !



வீட்டை விட்டு கிளம்பும்போது
ஐம்பது அடி இடைவெளி
ஐயர் தெரு வரும்போது
ஐந்து அடி இடைவெளி
கோவில் வாசலில்
காலணிகளை ஒன்றாக கழற்றி வைக்கின்றோம்
கடவுளே காதல் கோட்பாட்டினை
கற்று விட்டேன் நானும் !



உனது கண்ணக்குளியில்
சேமித்து வைத்திருக்கும் நமது காதலை
உனது அண்ணன் வீட்டு
மாமரத்தில் இருக்கும் தேனீக்கள் திருடி செல்ல
வரைபடம் கொண்டு ஆலோசனை செய்து வருகிறதாம் !



என்னை கண்டதும் மறைந்து நிற்கையில்
உனது வெட்கத்தின் சாரலில்
எனது இதயத்தின் பரப்பளவு நனைந்து கிடக்கிறது !



பரிணாம வளர்ச்சிக்கு சிறந்த எடுத்துக்காட்டு
நமது காதல் போதுமே..நாம் எனும்
சொ(செ)ல் கொண்டு தொடங்கியது !



உனது விழிகளை பற்றி எழுவதனால்
கருவம் கொண்டு எனது பேனா
வேறெதுவும் எழுதிடாமல் பேனாவோடு
அணிசேராமல் அமைதி காக்கிறது !



காதலினை உட்கொண்டு
புன்னகைக்கும் உன் இதழ்களுக்கு
வியர்வையின் கோட்பாடு தெரியாமலிருக்கலாம்
ஆனால் தேனின் மூலக்கூறு வாய்பாடு தெரியும்போல..!



எனக்கான கவிதை வடிப்பில்
ஆழ்ந்து நீ சிந்திக்கும் போது
கவனிப்பின்றி கிடந்த காகிதங்கள்
காற்றினோடு சண்டையிட்டு
உன் முன்னால் மண்டியிட்டு கிடக்கின்றன !



எனது சொக்காப்பை நண்பனை
இரு விரல்களுக்கிடையே நிறுத்தி
ஒரு விரல் கொண்டு அழுத்தி
அழகாக கிறுக்குகிறாய் மௌனத்தினை
மற்ற ஏழு விரல்களின் அனல் கொண்ட பார்வையினை
தாங்கமுடியவில்லை பேனா மையது
விரைவு தந்தியினை அனுப்பியிருக்கிறது !



சற்று முன் இறந்த
உனது உதட்டு சொற்கள் அனைத்தினையும்
காற்று குறிப்பு எடுத்து சென்றுள்ளது
காற்றின் ஆண்டுவிழாவில்
வெளியிடப்பட இருக்கும் வரலாற்று நாவலில்
அட்டைபடம் உனக்கென ஒதுக்கப்பட்டுள்ளதாம்
சிறப்பு விருந்தினராக எனக்கும் அழைப்பு உண்டு !



ஆசையாய் உனக்கென கரையாளர் தோப்பில்
மாங்காய் திருடிவந்தேன்
பத்திரமய் அரிசி பானைக்குள் வைத்துவிட்டாய்
முறைத்து பார்த்தோம் நானும் மாங்காவும்
பாதி கடித்து நீ தருவாய் என எதிர்பார்த்திருந்தோம் !



29 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 5



மொட்டை மாடியில் மெழுகுவர்த்தி ஒளியில்
காதல் செய்ய அனைத்து ஏற்பாடுகளையும்
அமைத்து கொடுத்த மின்சார வாரியத்திற்க்கு
விழா கமிட்டியாளர்கள் சார்பாக
மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்களாமே !



கோவிலில் சர்க்கரை பொங்கள்
ஊட்டிய போது மாட்டிக்கொண்டோம்
ஊர் ஐக்கிய சங்க தலைவரிடம்
குழந்தை வேண்டி பாயாசம் போடுடா
எல்லாம் நல்லாவரும் வாழ்த்தி போனபோதுதான்
பொங்கலின் இனிப்பு தித்தித்தது..தேனாய் !



படித்துக்கொண்டே நாம் படித்த பள்ளியிலே
பகுதிநேர ஆசிரியராக பணியாற்றுவதுதான் சரிதான்
மாலையில் நான் அமர்ந்து போசும்
மர நிழலில் காற்றினோடு கவிதை பாடுகிறாயாமே
தென்றலின் அண்மைச் செய்திகுறிப்பு இது !



உனக்கான கவிதை தொகுப்புகளோடு
பல ஆயிரம் அடி உயரம் பறந்து
சில ஆயிரம் மைல் கடந்து வந்தாலும்
உனது விழியினில் எனை கண்டதும் வரும் முதல் துளிக்கு
என்னால் எதுவுமே செய்ய முடிவதில்லை அது ஏனோ !



ஓடி வந்து சுற்றி பார்த்துவிட்டு
அருகினில் அமர்ந்து எனது தோளில்
சாய்ந்து கொண்டு கேட்பாய் எப்படி இருக்க..
பதினோறு மாதங்களுக்குபின் சுவாசம் பெறுகின்றேன்
மலரே நீ உதிர்த்த சுவாசத்தினால் !



நீ கற்ற வேதியியலை
அடுக்களையில் முயற்ச்சிக்காதே
பாவம் மாமாவுக்கு
உப்பு காரம் அதிகம் ஆகாது !



நான் வாங்கி வந்த
மலர் செடிகள் எதுவுமே பூக்கவில்லை
பூவே உனை கண்டபின்
நமக்கு இங்கு இடம் இல்லையென
பூக்களின் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
கால வரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதாம் !



உனது சிங்கப்பல்லின்
சிநேகம் பிடிக்குமாம்
எனது வீட்டில் காய்த்த கொய்யாப்பழத்திற்க்கு !



உனக்காய் நான் வாங்கிய
கண்ணாடி வளையல்களை
ஆசையோடு அத்தைமகள் கேட்கிறாள் என
அம்மாவோடு அத்தையும் வாங்கி கொடுக்க
வாங்கியதோடு கை முழுவதும்
அடுக்கிவைத்து ஆட்டிகாட்டிட
அருள் கந்தனுக்கு வந்ததோ இல்லையோ
தாவணி கட்டிய கன்னி தமிழச்சிக்கு வந்தது !



அத்தை மகளுக்கு கொடுத்த வளையயெல்லாம்
கூட்டத்தில் உடைந்து விட்டாதாம்
உனது கோபம் உன்னுடைய தங்கை வடிவில்
அவதாரம் எடுப்பது எனக்கு மட்டுமே தெரிந்த உண்மை !



28 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 4



உனது வீட்டில் மட்டுமேன்
செல்லப்பிராணிகளே இல்லை என்றேன்
செல்லமே உன்னை தவிர யாரும் இல்லை
என்னோடு மௌனமாய் பேசிட என்கிறாய் !



நூலகத்தில் புத்தகம் எல்லாம்
வெளிநடப்பு செய்துவிட்டனவாம்
எனை கண்ட ஆவலில்
உனை நீ மறந்திருக்க
பாவம் புத்தகம் என்ன செய்யும் !



இப்போதும் குளத்துக்கரையில்
மிதிவண்டியில் முன் கம்பியில்
என்னோடு அமர்ந்து வருபவள்
நீயாக மட்டும்தான் இருக்கும் !



காதலிப்பவர்கள்
கடற்கரை செல்வது அழகு என்கிறார்கள்
தண்ணீரே இல்லாவிட்டாலும்
குளந்தங்கரைதானடி அழகே அழகு நமக்கு !



தலை நிறைய மல்லிகை வேண்டும் என்றாய்
வாங்கி வந்தேன் யாருக்கும் தெரியாமல்
உனது கையால் அல்ல
அத்தையின் அரவனைக்கும் கைகளால் என்கிறாய்
பூக்களும் உன் மீது காதல் கொள்ளும் பூவே !



திருவிழாவிற்க்கு வாங்கி தந்த
பலூனில் காற்று வெள்யேறாமல் இருக்க
... 144 தடைச்சட்டம் போட்டிருக்கிறாயாமே !
உனது சுவாசத்தில் தானே
நானே வாழ்கின்றேன் பாவம்
பலூனை விடுதலை செய்ய அனுமதிக்கொடு



ஊருக்கு வந்த ஆறாம் நாள்
சோகத்தின் உச்சியில் உனது முகம்
கடல் கடக்க இருபத்திநான்கு நாட்கள்
மட்டுமே என்றெண்ணி..
உன்னோடு இருபத்திநான்கு மணி நேரமாவது
வாழ ஓடிக்கொண்டிருக்கின்றேன்
நாடு விட்டு நாடு..கடல் தாண்டி !



ஏழு நாட்களும் இரவனில் வரும் சப்ரத்திற்க்கு
நமது தெருவில் எழுந்து வணங்குவது
நமது பாட்டிகளும் நாமும்தான்
பக்தி முத்துவது இதுதான் போல !



தீபாவளிக்கு வழக்கமே இல்லாமல்
நாம் வேட்டி சேலை கட்டியது
பூக்கள் தொடுத்து
பார்பானை அழைக்க
அனைத்து இளைஞர் சங்கமும் அழைப்பு விடுத்துள்ளன !



மருமகனே !
நாளைக்கு நூறுமுறை அழைக்கும்
தந்தையிடம் சொல் சீதனமாக
உனக்கு ஊட்டிய பால் சங்கு வேண்டுமென்று !



27 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 3



அனைத்துவகை மிட்டாய்களையும்
ஊருக்கே வாங்கி வருகிறேன்
எனக்காய் உள்ளங்கையில் ஒளித்து வைத்திருக்கும்
ஆரஞ்சுமிட்டாய் போதும் எனக்கு !



நீ துணி காயப்போட வரும் நேரத்திற்க்காக
நான் பசுமை புரட்சியாளனாக மாறிவிட்டேன்
மச்சு முழுவதும் உன் அழகை மெச்சும்
செடிகள் வளர்கின்றேன் !



அடுத்து என்ன பட்டம் வேண்டி
படிக்க போகிறாய் என்றேன்
மாலை அணிவித்து நீ தரும்
திருமதி பட்டம் என்றாய்
நானும் வெட்கம் கொண்ட நேரமது !



அம்மா வைக்கும் புளிக்குழம்பு போல
உன் விரலில் வரிசையாய் மாட்டி தின்னும்
அப்பளப்பூவும் எனக்கு பிடித்த உணவாய்போனது !



ஐந்து வயதில் ஆலமரத்தில்
ஊஞ்சல் கட்டியது நினைவிருக்கிறது என்றேன்
அவசரப்படாதே தொட்டில் கட்ட
மாதங்கள் உண்டு தள்ளியே இரு என்கிறாய் !



தேர்வுக்கு முதல் நாள் அம்மாவிடம்
ஆசி வாங்க வருவாய்
எல்லாவற்றிலும் நீ தேர்ச்சி பெறுவாய்
அம்மா வேறெதுவும் அர்த்தமின்றி
உன்னை வாழ்த்துவதுண்டு !
நீ படிக்க பணம் தடையானது
அவள் படிக்க நீ தடையாகி விடக்கூடாதென்று
என்னோடு கோபத்தில் கூறுவதாய்
முகபாவனை செய்வதுண்டு
என்னதான் இருந்தாலும் அம்மா அம்மாதான் !



தேர்வு எழுதுகிறோம்
ஆறு மாதங்களுக்கு ஒருமுறை நீயும்
வருடத்திற்க்கு ஒருமுறை நானும் !
நீ வெற்றி பெறுவது ஊரறிந்த உண்மை
நான் வெற்றி பெறுவது உன் தந்தைக்கு
மட்டுமே தெரிந்த உண்மை !



எத்தனை தீபாவளிதான்
தாவணியில் தரிசிக்க என்பேன்
நாளையே மாலையிடு
பொங்களுக்கு பட்டுகட்டி
காட்சி தருகிறேன் என்கிறாய்
தாவணி தேவதை சேலைகட்டி
என் முற்றத்தில் பொங்கலிட
உனக்கு போட்டியாய் என்னை துரத்தியவர்கள்
பெரும் மூச்சுவிட கண் விழிக்கும் கதிரவன்
என்னோடு கண் சிமிட்டுகிறான்
நேற்றைய கனவது..!



நான் வாங்கிவரும் சேலையினை
கட்டிவிட்டு திரும்ப தருகிறாய்
முத்தங்களை மட்டும்
வீட்டுக்கு எடுத்துச் செல்கிறாய் !



முப்பதே நாட்களில் காதல்மொழி பேசலாம்
எனது விடுமுறை குறித்து
ஊர் தண்ணீர் தொட்டியில்
நண்பன் எழுதிய வாசகம் !



26 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 2





அடுத்த வாரம் மாமன் மகன்
வருவதாக பொய் கூறுவாய்
கடந்த வாரம் அத்தைமகள் வந்தால்
என்ற உண்மையை வரவழைக்க !



ராட்டினத்தில்
உன்னோடு சுற்றியபின்புதான்
புவியியல் புரிந்தது
பூமி கோளம் என்று !



திருவிழா பட்டாசு வெடிக்கும் நேரத்தில்
என் பின்னே ஒளிந்து கொள்வாய்
பயல் அல்ல...
பட்டாசு அனைத்தும் உனை கண்டுபின்
பதத்துவிடும் என்பதனால்தான் !



தேர் வடம் பிடித்து இழுக்க
தம்பதியினரை அழைக்கும்போது
முந்தி சென்று வடம் பிடித்தது நாமாகத்தான் இருக்கும்
மஞ்சள் கயிறு கட்டும் முன்னே தம்பதியரானோம் !



வீட்டருகே தேர் வந்தால்
அடுத்து வந்து நின்று கொள்வாய்
முதலில் குடும்ப புகைப்படத்திலும்
அடுத்ததாய் குடும்பத்திலும்
இடம் பெறும் குறிப்பு அறிந்து !



நான் ஊருக்கு வருவதை
வானவில்லின் வர்ணமாகிய
உன் வீட்டு கோலம் சொல்லுமடி ஊருக்கு !



நீ புள்ளி வைப்பது என்னவோ
உன் வீட்டு முற்றத்தில்தான்
கோலமிடுவதோ என்வீட்டு
துளசி மாடத்தில்தான் !



நீ பாதி நான் பாதி
கடித்து துப்பிய வேப்பம்பழம்
அழகாய் வளர்ந்து மஞ்சளுடுத்தி
ஊருக்கே காவல் தெய்வமாகிபோனது !



அமீரகத்திலிருந்தும்
கண்ணாடி வலையல் கேட்கும்
தேவதை நீ மட்டும்தானடி !



மொட்டைமாடியில் படுத்துகொண்டு
விமானத்திடம் நீ சொல்லும் சேதி அனைத்தும்
பத்திரமாய் குறித்து வைத்திருக்கிறேன் !



25 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 1





விடல் சிதறல் தேங்காவும்
வித்தியாசமாக பார்க்கின்றன
என் நெற்றில் திருநிறு இட்டு
கைகள் கண்கள் மூடி
உன் சுவாசத்தின் சுழற்சி முறைக்கு பின்பு !



நீ கண்கள் மூடி வேண்டும் வேளையில்தான்
கற்சிலைகள் அனைத்தும் கண்கள் திறந்து
வேண்டுதல் ஏற்கின்றன !



எல்லோருக்கும் கையில் பிரசாதம்
உனக்கு மட்டும் காகிதத்தில்
உதிரம் கொண்டு உதிர்த்த மடலது !



அடிமேல் அடிவைத்து
பாதம் நகர்த்தி வேண்டுதலின் போது
எறும்புகள் பாதையில் சிவப்பு விளக்கிட்டு
சிறப்பு தரிசனம் வேண்டுகிறது !



வாரத்தின் ஏழும் வெள்ளியாகி விடக்கூடாதா
என் குலச்சாமியே !
உன்னை கோவிலில் தரிசிக்க



நீ சனீஸ்வரனை வேண்டும் போது
உனது அண்ணனும்
விநாயகனை வேண்டும் போது
எனது அண்ணனும்
நினைவுக்கு வருவதாக கூறும்போது
கோபம் கொள்வாய்
நான் இரண்டாவது அத்யாயம் தொடங்கிவிடுவேன் என்று



தீபத்தினை தொட்டு மூன்று முறை
கண்களில் ஒத்திக்கொள்கிறாய்
என்னோடு நடக்கும்போது மட்டும்
மூன்று அடி இடம் பெயருகிறாய் !



நீ கட்டி எடுத்து வரும்
மாலைக்காகதான் காத்திருக்கிறோம்
நானும் கடவுளும் !



அவ்வப்போது அண்ணனோடு
அருள்தரும் வேளையில்
கட்டைவிரல் திரும்பி நின்று
மணலில் புதைந்து கொள்கிறது
காவலனை கண்ட கள்வனை போல
பின்னே...
மகாலெட்சுமியை கடத்த வந்தால்
கையில் எடுத்தா கொடுப்பார்கள்
என்கிறாள் உன் தங்கை !



உன்னைவிட உன் தங்கையே அழகு என்பேன்
அப்போ அவளையோ கட்டிக்கோ
என்று முகம் சுழிப்பாய்
முகம் மாற்ற முயலுவதாய்
மீண்டும் கோபமுறச் செய்வேன்
அவளையும் சேர்த்து கட்டிகொள்வதாய் கூறி !



21 December, 2012

முதல் முத்தம்


(இதழ்களின் சொற்பொழிவு)



சந்திரன் நாணம் கொள்ள
சூரியன் சாட்சி சொல்ல
தென்றலோ !
சானம் கலக்கி வாசல் தெளித்திட
சிட்டுக்குருவிகள் !
புள்ளி வைத்து கோலமிட
சத்தமில்லாமல் சறுக்கிடாமல்
சற்றே பின் வந்து
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
கலைந்து கிடந்த கூந்தலினை விலக்கி
காதோரம் ஈரம் பட்ட விரல்களின் வரைவு
தென்றலின் ஈரமும்
சுவாசத்தின் வெப்பமும் கலந்திட
இட கை கோர்த்து
இடை சேர்த்து வல கை அள்ளிட
கால் விரல்கள் வெட்கத்தில் தலைகுனிந்திட
விழிகளோ இதழ்களோ
பேச அனுமதிக்கவில்லை
பேசவும் தயாராக இல்லை
நெற்றி சங்கமிக்க
புருவங்கள் புன்னகையிட
பருவமது ஆணையிடாமலே அணைத்தபடி
பருகியதடி இதழ்கள்…
இதழ்களை…இதழ்களினால்..!
அமுதம் தானோ.. அமுதமே தானோ..!
மீறிடாத வறைமுறைக்குள்
மானிடனாய்
மன்மதனாய்
மணிகண்டனாய்
மணித்துளிகளில்
தேன் இதழ்களின் தேவாமிர்தம்
காற்றினை மென்ற
இதழ்கள் பேசியதுதான் “முத்தமோ”
முத்தமே….
இது இதழ்களின் சொற்பொழிவு…!

20 December, 2012

மலரே !

நீ தேடும் வண்டு நானாக இருக்கலாம்
ஆனால் மலர் தேடும் படையெடுப்பில்
இல்லை எனது பயணம் !