அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

28 December, 2012

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 4



உனது வீட்டில் மட்டுமேன்
செல்லப்பிராணிகளே இல்லை என்றேன்
செல்லமே உன்னை தவிர யாரும் இல்லை
என்னோடு மௌனமாய் பேசிட என்கிறாய் !



நூலகத்தில் புத்தகம் எல்லாம்
வெளிநடப்பு செய்துவிட்டனவாம்
எனை கண்ட ஆவலில்
உனை நீ மறந்திருக்க
பாவம் புத்தகம் என்ன செய்யும் !



இப்போதும் குளத்துக்கரையில்
மிதிவண்டியில் முன் கம்பியில்
என்னோடு அமர்ந்து வருபவள்
நீயாக மட்டும்தான் இருக்கும் !



காதலிப்பவர்கள்
கடற்கரை செல்வது அழகு என்கிறார்கள்
தண்ணீரே இல்லாவிட்டாலும்
குளந்தங்கரைதானடி அழகே அழகு நமக்கு !



தலை நிறைய மல்லிகை வேண்டும் என்றாய்
வாங்கி வந்தேன் யாருக்கும் தெரியாமல்
உனது கையால் அல்ல
அத்தையின் அரவனைக்கும் கைகளால் என்கிறாய்
பூக்களும் உன் மீது காதல் கொள்ளும் பூவே !



திருவிழாவிற்க்கு வாங்கி தந்த
பலூனில் காற்று வெள்யேறாமல் இருக்க
... 144 தடைச்சட்டம் போட்டிருக்கிறாயாமே !
உனது சுவாசத்தில் தானே
நானே வாழ்கின்றேன் பாவம்
பலூனை விடுதலை செய்ய அனுமதிக்கொடு



ஊருக்கு வந்த ஆறாம் நாள்
சோகத்தின் உச்சியில் உனது முகம்
கடல் கடக்க இருபத்திநான்கு நாட்கள்
மட்டுமே என்றெண்ணி..
உன்னோடு இருபத்திநான்கு மணி நேரமாவது
வாழ ஓடிக்கொண்டிருக்கின்றேன்
நாடு விட்டு நாடு..கடல் தாண்டி !



ஏழு நாட்களும் இரவனில் வரும் சப்ரத்திற்க்கு
நமது தெருவில் எழுந்து வணங்குவது
நமது பாட்டிகளும் நாமும்தான்
பக்தி முத்துவது இதுதான் போல !



தீபாவளிக்கு வழக்கமே இல்லாமல்
நாம் வேட்டி சேலை கட்டியது
பூக்கள் தொடுத்து
பார்பானை அழைக்க
அனைத்து இளைஞர் சங்கமும் அழைப்பு விடுத்துள்ளன !



மருமகனே !
நாளைக்கு நூறுமுறை அழைக்கும்
தந்தையிடம் சொல் சீதனமாக
உனக்கு ஊட்டிய பால் சங்கு வேண்டுமென்று !



No comments: