அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

07 June, 2013

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 10





வெண்ணிலவும் காவல் நிற்கும்
மாலையிலே நீ தலை குளித்து
மல்லிகை மொட்டு சூடி
விளக்கினிற்கு ஒளி தருகையிலே !



வியாழனில் நூற்பாலைகள் அமைத்து
விண்வெளி சுற்றுப்பயணம் செய்து
சேகரித்த விண்மீன்களை
சேலையிலே ஆங்காங்கே
ஆய்வு செய்து நட்டிருகிறேன்
பிறந்தநாள் பரிசுக்காக !



புளூட்டோவிற்கு தனிக்குடித்தனம்
போய்விடலாம் என்றேன்
அங்கே குளிர் அதிகம்
உன் குறும்புகளும் அதிகம் என்கிறாய் !



பூமியிலே நீ சுற்றி பார்க்க
பயணம் ஏதும் செய்யாததால்
மனம் உடைந்த பூமி
தன்னை தானே சுற்றி காட்டுகிறது உனக்கு !



நீ இட்ட மரமாகி விட்டதே
உன் இதயத்தில் நான் இட்ட விதையின்
முளை குறுத்து குறிப்பு அறிய வேண்டுகிறேன் !



நீ நடந்து செல்லும் இடமெங்கும்
மரக்கன்றுகள் நட்டிருகிறேன்
உன் நிழல் வாடாமல் இருக்க
நிஜமோ பஞ்சாயத்தாரின் அசோகன் நானாகி போனேன் !



உன் விழி கதிர்வீச்சினால்
என் இதயத்தில் காதல் வளரதானே செய்கிறது
பின் அணுகதிர்வீச்சுகொன்ன
இத்தனை போராட்டமோ !



மொட்டை மாடியில் உனது மடியில்
தலை வைத்து படுத்திருக்கும் போது
விரல் நீட்டி நிலவு பாரு என்கிறாய்
நிலவே நான் உனது மடியில் தானே கிடக்கிறேன் !



எனது முதுகினில் உனது முதுகினை சாய்த்து
எப்போதும் புத்தகம் படிக்கிறாய்
நான் உன் இதயம் பேசும் கவிதைகளை
எனது முதுகொலும்பில் சேர்த்து வைக்கிறேன் !



உன்னை பார்க்கும் போது
இளையராஜாவின் இசை கேட்கவில்லை
தென்றலின் தாளம்தான் கேட்கிறது
எத்தனை தாளங்களடி
உன்னை பார்க்கும் போது தென்றலுக்கு
காற்றுக்கு தேசிய விருது கிடைக்கும் வாய்ப்பு உறுதி !



No comments: