அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

09 September, 2013

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 11





உன்னை பார்த்து கொண்டே ராட்டினம் சுற்றுகிறதே
அதற்கு தலை சுற்றாதா
விழிகள் முளைத்த ராட்டினமே
நீ மட்டும்தான் இமைப்பதில்லை !



ஆளே இல்லாத வயக்காட்டில்
ஆள் காட்டி விரலை கோர்த்துகொண்டு
கவிதை பேசிக்கொண்டே நடக்கிறோம்
காற்றே நம்மை பின் தொடரும்
கவிதைக்கான குறிப்பு எடுத்துக்கொள்ள !



என்னை கண்டதும் மறைந்து நிற்கையில்
உனது வெட்கத்தின் சாரலில்
எனது இதயத்தின் பரப்பளவு நனைந்து கிடக்கிறது



எதனால் செய்த தூரிகை கொண்டு
பிரம்மன் துருவம் கொடுத்தானோ
அத்தனையும் அழகாகவும் ஆபத்தாகவும்
அமைதியாய் வெடிக்கின்றதே !



உன் விழி சரணடைய காத்திருக்கும்
என் விழிக்கொன்னாலும் இத்தனை கர்வம் அதிகமடி
இமைக்க மறுக்கிறது
என்னை கடந்து செல்கையிலே !



திருவிழா கூட்டத்தில் யாருக்கும் தெரியாமல்
கைமாறிய ரோஜாவினை சித்தியின் தலைமையில்
அமைந்த சிறப்பு பிரிவு கண்டுபிடித்துவிட்டது
அத்தைகென்று சொல்லி அவள் வீட்டில் பறித்த ரோஜா அது !



இந்த மடலோடு நான் உனக்கு எழுதியது
10001 என புள்ளியியல்துறை கணக்கிலிட்டு
மடல் எழுதும் முறையை
பின்பற்றிய நமக்கு தபால்தலை வெளியிட
தபால்துறை சிறப்பு ஏற்பாடு செய்துவருகிறது !



உனக்கு மிதிவண்டு சொல்லி கொடுத்தவன்
என்கிற முறையில் சொல்கிறேன்
நமது வாழ்க்கை பயணத்தில் சுமை தாங்கிட
இமையினால் வலி தாங்கிடவும் நீ தயார்தானென்று.



நீ கட்டி தந்த சேலையினை அனைத்தபடி
உச்சி வெயில் வரை உறங்கி போனேனடி
மேலிருந்து சூரியன் கேட்கிறான்
நிலவினோடு இன்னும் என்ன கனவா..!



உன் விரல் கடித்த
எனது பற்களிடம் கேட்கிறேன்
என்ன சொல்ல கடித்தாயென
என்னென்னமோ சொல்கிறது
இறுதியாக நீ வைத்த சாம்பாரின்
முருங்கைகாய் என கடித்து விட்டதாம் !



No comments: