அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

ஆய்க்குடி

நாள் என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
எனை நாடி வந்த கோள் என்ன செய்யும்? கொடுங்கூற்று என்ன செய்யும்?
கந்தன் துணை இருக்கையிலே….

பாரதத்தின் பண்பையும்
தமிழின் இனிமையையும்
தென் பொதிகையின் சுவாசித்தினையும்
குற்றாலத்தின் குளிச்சியையும்
முழு முதலாய் பெற்ற நகர்
ஆய்க்குடியே….


ஆய்க்குடி,,,,

அருள்தரும் தமிழ் மாமுனிவர் அகத்தியரின் திருபாதங்கள் பதியப்பெற்ற மலை தென்பொதிகையாகும். இம்மலையின் அருகில் தென்காசி நகரின் வடகீழ்த் திசையில் 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ஆய்க்குடி கிராமம், ஆய்க்குடி என்ற பெயர் வரக்காரணம் என்ன? அதற்கான சாட்சி என்ன? என்பதை தெரிந்து கொள்வோம்…

கடையேழு வள்ளல்களில் ஒருவரான ஆய் ஆண்டிரன் ஆய்க்குடியில் வாழ்ந்த, ஆண்ட குறுநில மன்னன் ஆய் ஆண்டிரன் ஆண்ட பகுதி என்பதால் ஆய்க்குடி எனும் பெயர் அமைந்ததாக இலக்கியங்களால் அறிகிறோம். சங்க இலக்கியங்கள் நற்றிணை (167) குறுத்தொகை (84) அக நானூறு (69,152,198) புறநானூறு (127,136,240-41) ஆகிய நூல்களில் ஆய் ஆண்டிரன், ஆய்க்குடி என்னும் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

நாகம் நல்கி மகாலிங்க, ஆலமர் செல்வதற்க்கு கொடுத்தவன் ஆய் என்று சிறு பாணாற்றுப் படை (96-99) கூறுகின்றது. இவை அனைத்தும் ஆய்க்குடி என்று பெயர் வந்ததற்கும் ஒரு சாட்சி சான்றாக திகழ்கின்றது என்பது உண்மை.

ஆய்க்குடி ஆன்மீக வழிபாட்டில் சிறந்து விளங்கும் நகரம், ஆன்மிகத்தில் மட்டுமின்றி பொதுநல சேவையிலும் சிறந்து விளங்கும் நன்நகரமாக திகழ்கின்றது. ஆய்க்குடில் அமைந்துள்ள அமர்சேவா சங்கம் பொது நல சேவைகள் பல செய்து வருகிறது. தற்போது நகரங்களுக்கு ஈடாக ஆய்க்குடி வளர்ந்து வருகிறது

ஊரை சுற்றி பெரிய கல்வி நிறுவனங்கள் நிறுவப்பட்டுள்ளது ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி, காள கண்டேஸ்வரை – சமேத சௌந்தர்ய நாயகி, மகாலிங்கம் கோவில் ஆகிய திருக்கோவில்கள் பெயர் பெற்றன. ஆய்க்குடியில் மொத்த கோவில் 40 ஆகும். மக்கள் தொகை சுமார் 14432, ஆண்கள் 7282, பெண்கள் 7150 ஆய்க்குடி பேரூராட்சி பரப்பளவு 81/2 ச.கி.மீ பரப்பளவு ஆகும். 98 தெருக்கள் மற்றும் 15 வார்டுகள் கொண்டது.


என்றும் அன்புடன்

மா.மணிகண்டன்