அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

27 July, 2012

கருவறையில் நடக்க விரும்புகிறேன்...

நட்பில்..
நட்பால்...
நட்போடு....

துண்டு பிரசுரத்தில் கவிதை
படிக்க அலைந்த நாளொன்றில்
கவி புத்தகமொன்று
நட்பு கவிதை பகிர்ந்தது..!

எழுத்தில்...
எழுத்தால்..!

உன் குறிப்பு
புதுமையென்றும்..
உன் நட்பே
போதுமென்றும்..!

நான் தொலக்க விரும்பவில்லை
கருவறையில் நடக்க விரும்பினேன்..!

காணாமல் போனவர்கள் பட்டியலில்
நான்..! முதலிடத்தில்..
பலரது நட்பில்... நட்பால்..!

கடைகோடியிலிருந்தும்
கார்மேகங்களுக்கிடையே
கண்டு கொண்ட
நட்பு இது..!

வித்து விதைத்து
ஆ(ள)ழ விரும்பியவளே
வேரறுத்து தரிசாகி போன
இந்நிலத்தில்..
கங்கை..காவிரி
நீர் தொளித்து
கடவுள் எடுத்தாய்
ஊர் காண...!

கண்டதில்லை கண்கள்
குலுக்கி கொண்டதில்லை
கைகள்..!
ஆனாலும்..
நட்பு பாராட்டுகின்றோம்
கவி நட்பில்
கவித்துவமான நட்பில்..!

காதலால் கவினாகவில்லை
கண்களால்...
விழிகளின் மொழிகளினால்...!

என் கவிதை இரசித்தவர்கள்
இதயம் படிக்க விரும்பவில்லை
உன்னை தவிர..!

விவரமறிந்து யாருமே விழித்திடாத
மாப்பிள்ளை.....!
வித்யாசமாகதான் இருந்தது
ஆரம்பத்தில்...
மின்னஞ்சலின் ஆதியில்
இப்போது
அலங்கரிக்கவில்லையென்றால்
அடுத்தநாள் வரை
அடுக்கடுக்கான
ஆயுத எழுத்துக்களின் கேள்வி குறிகள்...!

அன்னை தவிர யாரும்
அமுது படைத்ததில்லை..
அன்பான உன் குடும்பத்துடன்
பௌர்ணமி நிலவில்
நிலாச்சோறு....!
மூன்றாம் பிடி
உருண்டை சோறு
என் கையில்...
ஒரு கடி அப்பளத்தோடு..!

அமைதியான
அந்திமாலையில்
என் வருகை பதிவுக்காக வாசலில்
காத்திருந்து பூத்த மலர்களுக்கிடையே
பகிர்ந்து கொண்ட
மொழிகள் இவையாவும்..!

இறுதியில் ஒன்றும்..

ஜென்மங்கள் நிஜமானால்...
உன் நட்பின் கருவறையில்
நான் நானாக நிலைத்திட வேண்டும்...

என்றும்...
என்றென்றும்....

20 July, 2012

புகையிலை

ஆறறிவு கொண்டவன்
ஆறாம் விரலாய் என்னும்
நான்
புதைக்கப்படும் நுரையீரலின்
இறுதி யாத்திரையின் நுழைவு வாயிலில்
உன் இதழின் துணைக்கொண்டு
நிறைவேற்றிக் காத்திருக்கிறேன்

13 July, 2012

அழகுக்கு காரணம்

பெண்:

அடுத்ததாய் இருக்கும்
அங்காடி முதல்
அமெரிக்க நிறுவனம் வரை
கிடைக்கும் அத்தனையும்
அவள்
அழகுக்கான குறிப்புகளில்...!


ஆண்:

வெட்கம் கொண்ட
அவள் விழிகள்
விழிகள் மட்டுமே..!

11 July, 2012

“சொற்பொருள் பின்வருநிலையணி”

தொலைத்துவிட்டேன் என்றிருந்தேன்
வேண்டுமென்றே தொலைந்துவிட்டாய் என்று
இந்நாள்...உன்னால் உணர்ந்து கொண்டேன்

துணிவில்லாதவன் என்று
தொலைந்து போய்விட்டாயோ...
என் கால் ஊன்ற தவித்துக் கொண்டிருந்த நேரம்
என் தோள் சாய தவிர்த்து தொலைந்து போய்விட்டாயே...

இன்று மாடி கட்டி
மகாத்மாவினை அச்சிட்ட
காகிதங்களாய் அடுக்கி வைத்திருக்கிறேன்
அடுத்து நின்று அழகு பார்க்காமல்
தொலைந்து போய்விட்டாயே...

என் இதயத்தின் துடிப்பினையும்
வறுமைக்கோட்டுக்கு கீழ்
கணக்கிலிட்டாயோ..!

இன்று முதல் சிரிக்கவும்
சிற்பங்களோடு கற்றுக்கொள்கிறேன்..

வாழ்க்கை வாழதான்
உணர்த்தி தொலைந்து போய்விட்ட
உனது இதயத்தின் வரிகளை அணிகளில்
“சொற்பொருள் பின்வருநிலையணி”

எனக் கணக்கிலிடுவதோ...!

நான்
என்றுமே நானாகவே
இருந்துவிட்டு போகிறேன்..!