அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

10 September, 2013

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 12



பறவைகளிடமிருந்து மொழி உருவாகியதாம்
உனது விழிகள் பேசும் மொழியினை அறிய
உலகம் முழுவதுமுள்ள பறவைகளின்
தமிக்குழு ஒன்று அமைத்திருகிறேன் !



உன் விழி இமைக்கும் நேரம்
எனது இதயம் துடிக்கிறது
உனது விழி வியந்த நேரம்
நமது காதல் உருவானது !



மொழி பற்றாளன்
இன்று விழி பற்றாளனாயி போனேன்
விழி மைதொட்டு
வீடு செல்லும் வழியெங்கும்
கவிதைகள் சொல்கிறேன் !



எந்த விரல் கொண்டு
விழிகளுக்கு மையிடுகிறாய்
விரல் நகத்திற்கிடையே
உலக வங்கியில் சேமிப்பு வைத்திருக்கிறது
விழிகளின் குறிப்பினை !



தூணில் சாய்ந்து கொண்டு
எனக்கான கவிதை வடிப்பின் போது
நீ அணிந்திருந்த மூக்கு கண்ணாடியினால்
விழி இடை தீண்ட தவித்து இயலாததால்
முற்றும் துறந்த தென்றல் என்னோடு மன்றாடியது
மாறிக்கொள்ள..!



புயல் விரும்பும் தென்றல் நீ !
எந்த திசையில் நடக்கிறாயோ
அந்த திசையெங்கும் காற்றின் தசைகள்
அனைத்தும் புத்துணர்வு பெற்கின்றன !



நான் இல்லாத போது கோபம் வருமாயின்
என் பெயர் சொல்லி கட்டிக்கொள்ள
பொம்மை வாங்கி தந்தேன்..
நித்தம் பதுமைகளிடம் வேண்டுகிறேன்
சத்தம் உன் மனதிலே வரக்கூடாதென !



உனது பெயரில் சந்திரனில்
நற்பணி மன்றம் துவங்க
விழிகளின் ஒப்புதல் வேண்டி
மலர்களோடு காத்திருக்கிறேன் மலரே
மன்றமே மன்றாடுகிறது
விழிகளே !



எந்த அளவினை கொண்டு உன் மீதான எனது காதலை குறிப்பெடுக்க
அத்தனையும் அளவில் குன்றியதாய் தெரிகிறது
இத்தனைதான் கணிதம் போல !



வண்ணத்துபூச்சி போல
விழிகளோடு விழிநோக்கும் நமது காதலை
தேவ லோகத்தில் பாடமாக்க போகிறார்களாம் !



No comments: