அன்புடன் வரவேற்கிறேன்

நண்பர்களே ! உங்கள் அனைவருக்கும் வணக்கம். என் கவிதைகள் உங்களின் வாசிப்பிற்கு தவம் இருக்கின்றன. ஆம் நீங்கள் வாசிக்கத் துவங்கினால் என் கவிதைகள் சுவாசிக்கத் துவங்கும்... நன்றி...

06 June, 2013

மௌனங்கள் உயிர்த்தெழுந்தால் ♥ பகுதி 9





உன்னை நினைக்காத நாளில்லை
என்பது கணிதத்தின் சரியான கூற்று இல்லை
நினைத்திடாத நாளிகை இல்லை
என்பதே சரியான தீர்வு !



நீ தேவதையும் இல்லை
அரக்கியும் இல்லை
குறிஞ்சு மலர்கள் கூடி பேசிடும்
மலரே நீயடி !



எனது கவிதைகள்
உனது விழிகளால் சலவை செய்யப்பட்டு
தினம் தினம் புதுமையாய்
நிறப்பதிவுகளை துயிலில் இருந்து எழுப்புகின்றன !



என்னை ஊருக்கு அனுப்பும் போது
விழிகள் நிரப்பும் வித்தியினை
எங்கிருந்து கற்று கொண்டனவோ உனது விழிகள்
அழாதே அழுதுவிடுவேன் நானும் !



உன்னோடு பயணம் செய்யும்போது
உன்னையே வாகனம் செலுத்த சொல்வதுண்டு
இமைக்கும் உனது விழியழகை
இமைக்காமல் பார்ப்பதற்காக !



எனது மீசைக்கும்
உனது புருவத்திற்கும் காதலாம்
உனது கண்களோடு என் இதழ்கல்
காதலை வெளிப்படுத்தியதிலிருந்து !



கற்காலம் படித்துவிட்டேன்
கண்ணகி காலமும் படித்து விட்டேன்
இப்போது கனவுகளில்
உனக்கு கணவனாகும் காலம்
பற்றிய குறிப்பு சேகரித்துக் கொண்டிருக்கின்றேன் !



நீ மஞ்சள் பூசிய நாளிலிருந்து
மற்ற கிழங்குகள் அனைத்தும்
நிறமற்ற நோய்காக மருந்து வேண்டி
மருத்துவரிடம் தஞ்சம் புகுந்துள்ளன !



மாத விளக்கு பூசையில்
மின்சாரம் தொடர்பு துண்டித்துபோக
விளக்கொளியில் ஒரு நிமிடம் திகைத்து போனேனடி
அம்மனே அமர்ந்திருப்பது போல நீ !



நான் வேட்டி கட்ட பழகி தந்தேன்
பயத்தில் எனை கட்டிக்கொள்ள
யார் பழகி தந்தார்களோ
இது அன்னிச்சை செயலென ஆய்வுகள் கருதுகின்றன !



No comments: